Breaking News

சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் சிலுக்குவார்பட்டி சிங்கம்படத்தின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

செல்ல அய்யாவுஇயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இப்படத்தில் ஓவியா, யோகி பாபு, லிவிங்ஸ்டன், மன்சூர் அலி கான், சிங்கமுத்து, கருணாகரன், ரெஜினா கஸாண்ட்ரா, சாய் ரவி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் புரோமோ வீடியோவாக வெளியாகியுள்ளது



ராட்சசன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள, விஷ்ணு விஷாலின் கதாபாத்திரம் சத்யமூர்த்தி என்று கூறப்பட்டுள்ளது. ஓவியா கனகா என்றும், ரெஜினா ராஜி என்றும் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விநியோக உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.