Breaking News

மோகன்லாலை வைத்து பீட்டர் ஹெய்ன் இயக்கும் படம் உறுதியானது!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், மோகன்லாலை வைத்து இயக்கவுள்ள படம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், மோகன்லாலை வைத்து இயக்கவுள்ள படம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்பவர் பீட்டர் ஹெய்ன். இவர் தமிழிலும், மலையாளத்திலும் பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புலி முருகன்’ படத்திற்கு இவர்தான் ஸ்டண்ட் மாஸ்டர். தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ‘ஒடியன்’ படத்துக்கும் இவர்தான் ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கிறார். 

இந்நிலையில் பீட்டர் ஹெய்ன்இயக்குனராகும் ஆசை இருக்கிறது என்பதை சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.அதிலும் மோகன்லாலை வைத்து ஒரு படத்தைஇயக்க விரும்புகிறேன் என்று கூறினார். ’புலி முருகன்’ படத்திற்காகமுதன்முறையாக மோகன்லாலுடன் இணைந்து அவருக்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்த பீட்டர் ஹெய்ன், இத்தனை வயதிலும் அவரது உடல் சண்டைக்காட்சிகளில் வில்லாய் வளைவது கண்டு பிரமித்து போனாராம். 

அதை தொடர்ந்து தற்போது ‘ஒடியன்’ படத்திலும் மோகன்லாலின் சண்டைக்காட்சிகளை பிரமிக்கும்படி வடிவமைத்துள்ளாராம். இந்த இரண்டு படங்களில் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தில், நட்பில் மோகன்லாலை வைத்து ஆக்சன் படம் ஒன்றை இயக்க வேண்டும் என உறுதியான முடிவில் இருக்கிறார்பீட்டர் ஹெய்ன். விரைவில் இந்தப் படத்திற்கான பணி தொடங்கப்படவுள்ளது.