Breaking News

Adanga Maru: ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் 6 பெரிய படங்கள்: கோலிவுட்டில் பரபரப்பு

கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி 6 பெரிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி கோலிவுட்டில் 6 பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்புள்ளதால் எந்த படம் வெற்றி பெறுமோ என்ற பதற்றம் திரைத்துறைaயில் ஏற்பட்டுள்ளது. 

கடந்த தீபாவளி அன்று சர்கார், பில்லா பாண்டி உட்பட 3 படங்கள் வெளியாகின. அதில் சர்கார் படத்தில் முன்னனி நடிகர் விஜய் நடித்திருந்ததால் சர்கார் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. 

6 படங்கள் :இந்நிலையில் இந்த மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டு வரும் தனுஷின் மாரி 2, சிவகார்த்திகேயனின் கனா, விஜய்சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்கமறு, அதர்வாவின் பூமராங் மற்றும் விஷ்ணுவின் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் ஆகிய ஆறு படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. நாள் நெருங்கும் போது இவற்றில் ஓரிரண்டு படங்கள் பின்வாங்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஒரே நாளில் இவ்வளவு படங்கள் வெளியானால் படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால் இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் ஆகும் தேதியை மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

சீதக்காதி, அடங்கமறு, மாரி 2, கனா, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், பூமராங் ஆகிய 6 படங்கள் டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் வெளிவரவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிவதால், இந்த படங்கள் வெளிவரும் பட்சத்தில் எந்த படம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.