Breaking News

மார்ச்சில் தொடங்கும் ரஜினிகாந்த் 166 படப்பிடிப்பு?

வரும் மார்ச் மாதம் முதல் ரஜினிகாந்த் நடிக்கும் 166ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா மணந்துள்ளார். 

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா (36). விஜய் நடித்த தமிழன் படத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட் படங்களிலும் மாஸ் காட்டி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் (26) மீது பிரியங்கா சோப்ராவுக்கு காதல் மலர்ந்தது. 

இதையடுத்து, இவர்களது திருமண ஏற்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி மெஹந்தி விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த மெஹந்தி விழா 

உடன் சேர்த்து 4 நாட்கள் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக இருவரும் ஜோத்பூர் சென்றுள்ளனர். ஜோத்பூரில் உள்ள உமைத் பவனில் நாளை டிசம் பர் 2ம் தேதி இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.