Breaking News

நாளை வெளியாகிறது சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ டீசர்!!

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு யூடியூப்பில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு யூடியூப்பில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சிம்பு ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கும் இந்தப் படத்தில் சிம்புவுடன் மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரோபோ சங்கர், மகத் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். 

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படத்தை, லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. வரும் பொங்கலன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில், இப்படத்தின் டீசர் 2.0 படத்தின் இடைவேளை நேரத்தில் ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, படத்தின் டீசரை யூடியூப்பில் வெளியிடும்படி ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். அதன்படி, டிசம்பர் 1 ஆம் தேதி (நாளை), காலை 11 மணிக்கு படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.