Breaking News

தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் – அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணையவிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.


ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என படக்குழுவினர் இன்று தெரிவித்துள்ளனர்.