Breaking News

'ஒருமாதத்தில் அரசியலுக்கு வருகிறேன்'- பாக்யராஜ் அறிவிப்பு


k bakyaraj
'ஒருமாதத்தில் அரசியலுக்கு வருகிறேன்'- பாக்யராஜ் அறிவிப்பு
நேரடியாக அரசியலுக்கு வரப்போகிறேன். எப்போது என தெரியாது ஆனால் ஒரு மாதத்தில் அரசியலுக்கு வந்துவிடுவேன் என நடிகரும், இயக்குனருமான கே பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் முக்கிய புள்ளிகளாக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர், கருணாநிதி உடல் நிலை காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கியுள்ள நிலையில், தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் நிலவுகின்றது.
இந்த வெற்றிடத்தை நிரப்ப கமல், ரஜினி உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவார்கள் என அவர்களது ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கமல் தனது டுவிட்டர் மூலம் அரசியல் சார்ந்த கருத்துக்கள் கூறி, பல ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ரஜினியோ பல ஆண்டுகளாக அவரின் ரசிகர்களின் கனவை டிசம்பர் 31ம் தேதி அரசியலில் ஈடுபடுவது உறுதி என கூறி நிறைவேற்றியுள்ளார்.

No comments