Red Rose Fm

எல்.டி.டி.ஈ. மீண்டும் தலைதூக்குவதாக சந்தேகத்தை ஏற்படுத்துகின்றனர்

நாட்டின் எதிர்காலத்தில் மக்களே தீர்மானிக்க வேண்டுமென அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினைகள் வருகின்றன. சகோதர சகோதரிகள் மோதிக் கொள்கின்றார்கள். 5 அடி நிலத்தை பெற்றுக் கொள்ள பெற்றோரும் பிள்ளைகளும் சண்டையிடுகின்றார்கள்.
இது எமது பகுதியில் இடம்பெறும் போது தனிப்பட்ட பிரச்சினையாகவே பார்க்கின்றோம்;. ஆனால் வடக்கில் இடம்பெறும் போது மீண்டும் எல்ரிரிஈயினர் தலைதூக்குகின்றார்கள்; என அரசியலில் வங்குரோத்தடைந்தவர்கள் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றார்கள்.
ஏன் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று கூறுவதைவிடுத்து இவ்வாறு போலி வதந்திகளை தெரிவிக்கின்றார்;கள் என்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டுக்கு வேண்டிய வகையில் இந்த நாட்டை முன்னேற்ற முடியாமல் போனால் அதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
போலி கருத்துக்களுக்கு மதிப்பளித்தோமையினால் இந்த நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அநுராதபுரம் கிழக்கு நுவரகம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
Share on Google Plus

About Red Rose Fm Sri Lanka

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment