Breaking News

கடலில் மூழ்கிய மாணவனின் உடல் கரையொதுங்கியது

சாய்ந்தமருது கடலில் கடந்த சனிக்கிழமை நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். 
சாய்ந்தமருது-11 ஆம் பிரிவை சேர்ந்த முஹம்மட் லத்தீப் முஹம்மட் இன்ஸாத் (வயது-16) எனும் மாணவனின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. 
கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர வகுப்பில் கல்வி பயில்கின்ற சாய்ந்தமருதை சேர்ந்த ஆறு மாணவர்கள் கடந்த சனிக்கிழமை மதியம் சாய்ந்தமருது முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது மூவர் கடல் அலையில் சிக்குண்டு மூழ்கியுள்ளனர். இவர்களுள் இருவர் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். 
மற்றைய மூன்று மாணவர்கள் பாதிப்பு எதுவுமில்லாமல் கடலில் இருந்து வெளியேறியிருந்தனர். 
அதேவேளை குறித்த ஒரு மாணவன் காணாமல் போயிருந்தமை தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததுடன் அந்த மாணவனை தேடும் பணிகள்இ மீனவர்களின் உதவியுடன் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. 
எனினும் மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சாய்ந்தமருதில் இருந்து சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருக்கோவில் பகுதியில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது. 
இது அவரது உடலம்தான் என்பதை பெற்றோர் அடையாளம் காட்டியதாகவும்இ பிரேத பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments