Breaking News

யாழ்ப்பாணத்தில் புதிய ஆபத்து

யாழ். வடமராட்சி கடற்பகுதிகளில் இந்திய முகவரி பொறிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
தொண்டமானாறு, அக்கரை, வளலாய் கடற்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவதாக அந்தப் பகுதி மீனவர்கள் குறிப்பிட்டனர்.
ஊசி மருந்து, கண்ணாடிப் போத்தல்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் இந்தியாவிலிருந்து வருகின்றதா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
வழமைக்கு மாறாக முதன்முறையாக இவ்வாறான பெருந்தொகை மருந்துப் பொருட்கள் கரையொதுக்குவதாக அந்தப் பகுதியில் நீண்டகால மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான கழிவுப்பொருட்கள் மூலம் கடற்கரையோர மக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படலாம் எனவும் மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் இந்த கழிவுகள் கப்பல் ஊழியர்கள் பயன்படுத்தி விட்டு கடலில் போட்டிருக்கக்கூடும் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜி.குணசீலன் கருத்துத் தெரிவித்தார்.
மூன்று உரப்பைகளில் மருந்துப் பொருட்கள் மற்றும் வெற்று மதுப் போத்தல்கள் கரை ஒதுங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் எதுவும் தமக்கு அறியக்கிடைக்கவில்லை எனவும் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர், கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.

No comments