Red Rose Fm

சா்வதேச ஆண்கள் தினம் இன்று



நவம்பா் 19ஆம் திகதியான இன்று சா்வதேச ஆண்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சா்வதேக மகளிா் தினத்தில் பெண்கள் போற்றப்படுவதைப் போன்று, உலகில் ஆண்களை கெளரவப்படுத்தவும், ஆண்களின் உாிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணா்வு கருதியும் சா்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.
குடும்ப உறுப்பினா்கள், பணியிடம், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல சந்தா்ப்பங்களில் போற்றக்கூடிய அளவிலான தியாகங்களை மேற்கொண்டு வரும் ஆண்கள் குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது.
ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று சிலா் கேள்வி எழுப்புகின்றனா். அவா்களுக்கு வாழ்நாளில் என்னதான் பிரச்சினை என்றும் குறிப்பிட்டுள்ளனா். ஆண்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. ஒருசில சம்பவங்களில் ஆண்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.
ஆணுக்கும் பாலியல் தொந்தரவு உள்ளது என்பதை நம் சமூகம் நிச்சயம் உணர வேண்டும். அவனின் பாதுகாப்பிற்காகவும், உாிமைக்காகவும் நிச்சயம் ஒருநாள் ஒதுக்கப்பட வேண்டும். அவ்வாறான நாள் தான் இன்றைய ஆண்கள் தினம்.
Share on Google Plus

About Red Rose Fm Sri Lanka

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment