Red Rose Fm

துறைநீலாவணையில் மின்னல் தாக்கி இளம் பெண் பலி



களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை 8 ஆம் வட்டார கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் குடும்பப் பெண் ரோபாலன் கலைவாணி (35 வயது) பலியாகியுள்ள சம்பவம் இன்று 19 ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில்;
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்கத்திற்கு அச்சமடைந்து. குறித்த இளம் பெண் தொலைக்காட்சியினை நிறுத்த எத்தனித்த போது இடி மின்னல் விழுந்ததன் காரணமாக தரையில் தலை அடிபட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இடி மின்னல் தாக்கம் காரணமாக வீட்டிலுள்ள பொருட்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணையினை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Red Rose Fm Sri Lanka

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment